உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  77

52  தலைவர்கள் தமிழ்நலம் காக்க!

செத்திடும் தமிழ்ஞா லத்தின் -
செந்தமிழ் நலத்தின் - நோக்கம்
ஒத்திடும் உணர்வால் மக்கட்
குண்மையில் பொதுத்தொண் டாற்ற
வித்திடும் தலைவர்க் கெல்லாம்
வேண்டுதல் ஒன்று கேட்பேன்;
‘முத்திடும் கடல்சூழ் நாட்டின்
முதுதமிழ் மொழிகாப் பீரே!'

'தமிழ்நலம் காத்தல் ஒன்றே
தமிழினம் காத்தற் கொப்பாம்!
கமழ்தரும் தமிழ்ந லத்தைக்
கலப்பினால் கெடுப்பீ ராயின்
உமிழ்தகு நிலைவந் தெய்தும்!
உயிர், மொழி; இனம், மெய் யன்றோ?
அமிழ்வது மொழிமுன் என்றால்
அழிவுறும் இனம்,நா டென்பீர்'

-1978

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/104&oldid=1419325" இலிருந்து மீள்விக்கப்பட்டது