பக்கம்:கனிச்சாறு 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  81

மண்டுபே ரறிவால் மல்கு
மறைமலை யடிக ளைப்போல்
பண்டித மணிபோல், சோம
சுந்தரப் பாவ லர்போல்
விண்டுசெந் தமிழ்வ ளர்த்த
விறல்மிகு திறமை மிக்கார்
உண்டெனில் அன்றோ நந்தம்
ஒண்டமிழ் வளரும் கண்டீர்!

-1979


56  தூயதமிழ் பேசுங்கள், எழுதுங்கள்!

தமிழ்நாட்டின் விடுதலையை நினைந்திடுவீர்;
நினைப்பதற்கே அஞ்சுவோர்கள்,
தமிழினத்தின் முன்னேற்றம் கருதிடுவீர்;
கருதுதற்குத் தயங்கு வோர்கள்,
தமிழ்மொழியைப் பேணுதற்கு முனைந்திடுவீர்;
பேணுதற்கும் தயக்கம் கொண்டால்
தமிழரென்ற பெயர்கூடத் தரையினிலே
தமிழர்க்குத் தங்கா தன்றோ?

தமிழென்றால் தூயதனித் தமிழ்மொழியே!
தமிழெழுதிப் பேசா தார்கள்
தமிழென்று பிறமொழிகள் பிழைமொழிகள்
கலந்தெழுதிப் பேசி வந்தால்
தமிழ்மொழியும் தரங்குறைந்து நாளுக்கு
நாளழிந்து தாழ்வ துண்மை!
தமிழ்மொழியும் பேணாதார் தமிழரென்று
பெயர்தாங்கல் தாழ்ச்சி யன்றோ?

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/108&oldid=1513016" இலிருந்து மீள்விக்கப்பட்டது