இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108 ☐ கனிச்சாறு – முதல் தொகுதி
76 எத்தனை நாள் இந்திப்போர் ?
எத்தனை நாள் எத்தனை ஆண்
டெத்தனைப் போர் எத்தனைப் பேர்
எத்தனைத் தோள் இந்திக் கெழுவதோ?
எத்தனைப்பேச் செத்தனைத்தாள்?
எத்தனைப்பா டெத்தனைப் பாட்
டெத்தனை தாம் எழுதிக் குவிப்பதோ?
எத்தனைநாள் நாம் பொறுப்ப
தெத்தனைப் பேர் நாமிறப்ப
தெத்தனைநாள் இந்தி எதிர்ப்பதோ?
ஒத்திணையும் எண்ணமிலை;
ஒன்றிரண்டு பார்த்துவிட
ஊர்ப்படைக்கு நாளொன் றுரைப்பமே!
-1967
77 வாளெடுத்துக் கொள்ளுங்கள்!
தோளெடுத்துப் பொங்குகின்ற தமிழ்மறவீர்!
இந்தியினைத் தொலைத்தற் கென்றோர்
நாளெடுத்துக் கொள்ளுங்கள்; தாய்மனைவி
மக்கள்முன் தமிழைக் காக்கச்
சூளெடுத்துக் கொள்ளுங்கள் ; வடவர்நெறி
மேன்மேலும் சூழின், கூர்த்த
வாளெடுத்துக் கொள்ளுங்கள்; வந்தமையும்
செந்தமிழ்த்தாய் வாழ்வும் அன்றே!
-1970