இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 3
1 தமிழ்த் தலைவர்க்கு!
தமிழ்த் தலைமை தாங்குவரே, தண்டமிழ்க்குத்
தணிப்பறியாக் கொடுமை செய்தே
அமிழ்பகைவர் தம்பாலே தகுபொருளைத்
தண்டுகின்றார், அவர்க்குச் சொல்வோம்!
தமிழ்க்குலத்தீர்! தமிழ்குலைத்தீர்; தமிழ்ப்பண்பு
தனைவிட்டீர், உங்கள் வாழ்வும்
தமிழ்த்தாயின் வாழ்வன்றோ? அந்நன்றி
தனக்கேனும் தமிழ்காப் பீரே!
-1950