உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  37



23  தமிழ்ப் போராட்டம்!

பாவலர், யாத்திடும் பாக்களில்
பைந்தமிழ்த் திறம்பயில்க!
நாவலர் ஆர்த்திடும் பொழிவிலும்
உரையிலும் தமிழ்ஒளிர்க!
காவலர் மறத்தொடும் விழிப்பொடும்
செந்தமிழ்க் காப்பளிக்க!
ஆவலர் தனித்தமிழ் ஆண்மையர்
பெண்டிரோ டார்ப்பரிமே!

-1965



24  மணிநாள் விரைந்தது... !

கல்லறைப் பிணத்தைத் தோண்டிக்
கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச்
செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்!
செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேரும்
மணிநாளும் விரைந்த தன்றே!

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/64&oldid=1512691" இலிருந்து மீள்விக்கப்பட்டது