பக்கம்:கனிச்சாறு 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


53  கூற்றை விளித்தனரோ?

தமிழ்ப்பகை ஆயிரம் சேர்வதுண்டோ? தமிழ்த்
தாயை மறுப்பதுண்டோ? - அவள்
தலையை அறுப்பதுண்டோ? - உடன்
சிமிழ்த்தெழுவாய் தமிழா! நறுந் தாய் துயர்
சேயும் பொறுப்பதுண்டோ? -
நேரம் நிறுப்பதுண்டோ?

எத்தனை ஆயிரம் காலமடா தமிழ்க்
கின்னல் விளைத்திருப்பார்? - தடை
பண்ண முளைத்திருப்பார்? - எறும்
பத்தனையே அவர் சேர்ந்திடினும், களி
றேற்றை வளைத்தனரோ? - பெருங்
கூற்றை விளித்தனரோ?

ஒத்திருப்பார்; பிழைப்பார்; எனஎண்ணினை!
ஊறு நினைந்துவிட்டார் - சின
ஊற்றில் நனைந்துவிட்டார்! - இனிச்
செத்துவிட்டார்; பிழையார்; என எண்ணிடு;
சீறி இணைந்துவிட்டால் - ஒரு
சேர முனைந்து விட்டால்!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/118&oldid=1424670" இலிருந்து மீள்விக்கப்பட்டது