பக்கம்:கனிச்சாறு 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


அதற்குள் உன்றன் அடிநிலை மறந்து.
உதைகள் வாங்கி வாங்கி உன்றன்
தோலும் மரத்தது; தோள்கள் சூம்பின!
காலும் மடிந்தது; கைகளும் ஓய்ந்தன!
ஆகவே கிண்ணிச் சோற்றுக் கலைந்தாய்!
சாகக் கிடந்தவன் உன்றனைச் சாகாது
காத்ததும், கல்விக் கண்ணைத் திறந்ததும்,
மீத்த தடயத்தால் பழம்வர லாறு
காட்டி, மொழித்திறன் கணித்ததும், உயிர்ப்பினை
மீட்டுக் கொடுத்ததும், பார்ப்பன மேட்டிமை 110
வீழ்த்தி உனக்கு விலக்குக் கொடுத்ததும்,
தாழ்த்திய உன்றன் தலையை நிமிர்த்ததும்
ஆங்கி லேயனே!
ஆயினும் வடவன்
தூங்கிய உன்றன் தொடையிலே கயிற்றை
நன்றாய்த் திரித்தான்; நாடு பெறுகையில்
'ஒன்றே யாமென' உன்னையும் இணைத்துப்
பொன்றா உன்றனிப் போக்கைத் தடுத்துத்
தமிழ அம்மியை வடக்குக் குழவியால்
திமிறத் திமிற அரைத்துத் தேய்க்கிறான்!
அம்மி தேய்ந்தபின் முதுகிலும் அரைப்பான்! 120
உம்மென நீதான் ஊங்கொட் டுவையே!

இத்தகு போக்கில் மொழியையும் இழந்து
மொத்தமாய் உன்றன் மூளையும் இழந்து, -
சொத்தெலாம் இழப்பாய் என்றே சொன்னால்,
[1]செத்தையும் [2]சருகும்[3]செருப்பும் போல
ஒத்துழைப் பதுவே ஒற்றுமை என்பாய்!
மெத்தவும் உன்றன் மேனி தடித்தது!

இனித்தமிழ் நாடே இந்தியத் தினின்று
தனித்துப் போவது தக்கதாம் என்றால்,
அரசியல் அடிப்படை என்னென ஆய்ந்தே 130


  1. 1. செத்தை - குளிர் காய்பவனுக்கு உதவுவது.
  2. 2. சருகு - எருவாட்டி தட்டுவோனுக்கு உதவுவது.
  3. 3. செருப்பு - மிதிப்போனுக்கு உதவுவது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/158&oldid=1424780" இலிருந்து மீள்விக்கப்பட்டது