பக்கம்:கனிச்சாறு 2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

இதுநேரம் எழாமல், நீ எதுநேரந்
தான் எழுவாய்? எண்ணிப் பார்ப்பாய்!
எதுநேரம் எந்தமிழர் ஆட்சியினை
இருட்டடிக்க - என்றே பார்ப்பான்
அதுநேரம் பார்த்திருக்க, அயர்வின்றி
உழைக்கின்ற அருட்செல் வர்போல்
எதுநேரும் என்றாலும் இளைக்காத
நெஞ்சொன்றா இனிமேல் கிட்டும்?

இன்றைக்கே நீ யெழுதல் இல்லையெனில்
னியடுத்து வரப்போ கின்ற
என்றைக்கும் தமிழா, நீ எழப்போதல்
இல்லையென எண்ணிக் கொள்வாய்!
அன்றைக்குப் போனதடா நின்னுரிமை;
நின்பெருமை; அனைத்து வாழ்வும்!
என்றைக்குச் சிறப்பாயோ? நந்தமிழ்த்தாய்க்

- குலகநிலை ஏற்று வாயோ?
-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/162&oldid=1416752" இலிருந்து மீள்விக்கப்பட்டது