பக்கம்:கனிச்சாறு 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

80  சொன்னால் தெரிந்து கொள்வையோ?

சொன்னால் தெரிந்து கொள்வையோ? - இல்லை
தன்னால் அறிந்து கொள்வையோ? - அட,
தமிழ்மகனே! - உன் - வினைக்கடனே - நீ (சொன்னால்)

முன்னாள் தொடங்கி, அவர் - இந்நாள் வரையும், உன்றன்
மண்ணாள் உரிமை நலந் தன்னால் பிழைக்கும் கதை
(சொன்னால்)

விண்ணோர் என உரைத்துன்
முன்னோர் தமை அடிமை - செய்தார்!
பயன் - கொய்தார்!
இழிவு - செய்தார்! - அந்த
ஒன்னார் ஆள் கின்றவரை
என்னாம் தமிழர் நலம்? - தீதே!
செய்வர் - சூதே!
-எனும் இதனைச்....
(சொன்னால்)

கன்னிக் குமரி நிலம்
பின்னிப் படர்ந்துயர்ந்து - ஓங்கி,
விறல் - தாங்கி
நலந் - தேங்கி - புகழ்
மன்னும் தமிழ் எழிலைத்
தின்னும் வடமொழியைப் - பின்னும்
உயர்த்த, அவர் - இன்னும்
-முயல் வதனைச்.... (சொன்னால்)

காட்டைத் திருத்தித் தமிழ்
நாட்டை வளம் பெருக்கி - நின்றோம்;
துயர் -- கொன்றோம்;
உலகு - வென்றோம்! - அவர்
மாட்டைத் தொடர்ந்து, புல்லின்
மேட்டை யறிந்து நாடி - வந்தார்!
துயர் - தந்தார்!
-கதை யிதனைச்...
(சொன்னால்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/172&oldid=1416767" இலிருந்து மீள்விக்கப்பட்டது