பக்கம்:கனிச்சாறு 2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 171


111

‘இந்து மதம்’ எனும் இழிமதம் ஒழிக!


மதத்தைப் போற்றும் மடமை மக்களே!
மக்களைத் தாழ்த்தும் மதம் உயர்ந் ததுவா?
மதத்தைத் தவிர்க்கும் மக்கள் உயர்ந் தவரா?
மக்களுள் பலரைத் தாழ்ந்தவர் என்னும்
மாமதங் கொண்ட மதமும் பெரிதா? 5

மதத்தைத் தவிர்த்தால் கொதித்திடும் நெஞ்சம்
மலத்தைத் தலையில் சுமந்திட வருமா?
இந்து மதமோ பார்ப்பன இழிமதம்!
சொந்த இனத்தையே சுட்டுப் பொசுக்கி
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 10
வாயிலா மக்களாய் வாட்டி வதைக்கும்
கொடுமை மதம் அது! கொடியவர் கூடம்!
கடுமைப் படுகுழி! கயமையின் தொகுப்பு
சாதி சாதியாய் மக்களைப் பகுத்து
மோதி அழிந்திடச் செய்யும் முள்காடு! 15

ஒருவன் தாழ்ந்தவன் ஒருவன் உயர்ந்தவன்
ஒருவன் கடவுள் ஒருவன் கீழ்மகன்
என்னும் ஆயிரம் இழிவுகள் செய்யும்
சின்ன மனத்தின் சீழ்உறை புழுக்குளம்!

வாயிலில் பலரை நிறுத்திவழி மறைக்கும் 20
கோயிலில் உள்ள கடவுள் எல்லாம்
பார்ப்பார்க்கு மட்டும் பாட்டன் உறவா?
ஊர்ப்பிறர்க் கெல்லாம் உதவாப் பகைகளா?
எந்த வாயினால் இந்து மதமெனும்
சொந்தப் பாழ்மதம் உயர்வெனச் சொல்லுவீர்? 25

எங்கோ ஒருவன் இழிநிலைப் பாவலன்
பெண்டுகள் நக்கும் வண்டு மனத்தவன்
‘அர்த்த முள்ளதே இந்து மதம்’ எனும்
சொத்தைக் கூற்றைச் சொல்லி இளிக்கிறீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/207&oldid=1437581" இலிருந்து மீள்விக்கப்பட்டது