பக்கம்:கனிச்சாறு 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


126

இன்றுதான் – அதுவும் – ஒன்றுதான்!


என்றுதான் - அதுவும் - ஒன்றுதான் - மிக
நன்றுதான் - தமிழ்
இனமுன்னேற்றம் இனமுன்னேற்றம்
என்றே அனைவரும் கொண்டே உழைப்பது! (இன்றுதான்)

வென்றுதான் தீரவேண்டும் தமிழினம்!
வெல்லாது போனாலோ அனைத்தும் அழிவுறும்!

(இன்றுதான்)


தொன்று தொட்டுதான் வந்ததே தமிழ்மொழி!
தொலைந்ததே அதுவெனில் வருமே பெரும்பழி!

(இன்றுதான்)


அன்று தொட்டுதான் இருந்ததே தமிழினம்!
அனைவரும் பேணிட விலையெனில் அழிவுறும்!

(இன்றுதான்)


தின்று தெவிட்டுவ தொன்றே வாழ்வெனத்
தீர நினைப்பது நன்றோ? தாழ்வு அது!

(இன்றுதான்)


குன்றும் குலையுமே காத்திட விலையெனில்!
கோடி கொடுப்பினும் நன்று அது நிலைபெறல்!

(இன்றுதான்)


என்றும் அழிவதே இவ்வுடற் பிறப்புதான்!
இன நலம் பேணிட அழிவதோ சிறப்புதான்!

(இன்றுதான்)

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/230&oldid=1437430" இலிருந்து மீள்விக்கப்பட்டது