பக்கம்:கனிச்சாறு 2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


149

கட்சியரசியல் ஒழிகவே


தெருச்சண்டை போடுகின்ற அரம்பர்களும்
வம்பர்களும் சட்டமன்றத் துட்பு குந்தே,
கருச்சிதைவைக் கிளறுதல்போல், கழிவறையை
அலசுதல்போல் கயமைச்சொல் புழங்கு கின்றார்!
உருச்சிதைய ஒருவரைமற் றொருவர் அறத்
தாக்கிக்கொண் டாடுகின்றார் ஆட்டம்! ஐயோ!
எருச்செறிவாய் இடவேண்டும் மக்கட்கே;
இல்லையெனில் மாக்களைத்தாம் பெறுவோம் இங்கே!

மக்களினை ஆளவந்தார் மாக்களென
இழிவாக நடப்பதுவோ, மானம் இன்றி?
தக்கபடி கல்வியொடு பண்பாடும்
ஒழுக்கமும்மிக் கோங்கியவர் ஆட்சி ஏற,
ஒக்கபடி நாம் எண்ணி ஒப்போலை
இட வேண்டும், அல்லாக்கால் தவிர்க்க வேண்டும்!
செக்கடியில் நாய்படுத்தே என்னபயன்?
சிந்திப்பீர்! கட்சியர சியல்ஒ ழிகவே!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/256&oldid=1437466" இலிருந்து மீள்விக்கப்பட்டது