பக்கம்:கனிச்சாறு 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௭

தொடர்பான செய்திகளை யெல்லாம் தொகுத்து நடுவணரசுக்கு அனுப்பிட, பாவலரேறு மீது பன்னிரண்டு குற்றச்சாட்டினைச் சுமத்தி 'இந்திய அரசின் செய்தித்தாள் பேரவை' 17.1.1986-அன்று மடல்வழி விடைகேட்டு எச்சரித்தது.
அதற்கு, “எங்களின் தமிழ் மொழி, பண்பாட்டு, இலக்கியங்களைக் கட்டிக் காக்கவே கட்டுரைகளையும் கருத்துகளையும் வெளியிடுகிறோம். அந்நிலையில் தமிழரல்லாத பிறர் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டுமென்பது எங்களின் நோக்கமன்று” - என்பதாக பாவலரேறு அவர்களால் நடுவணரசுக்கு விடை எழுதப்பெற்றது.
இச் சூழல் நிலை விளக்கி, “தமிழினம் காக்கத் தடையெது வரினும் தயங்கேன் யான்' என வீறுரைக்கிறார் நம் பாவலரேறு.
135.வீதிப் போராட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டையும் கடந்து மிகமிகத்தான் இனம், நாடு உய்யும் என விளக்குகிறார் பாவலரேறு.
136.பகை வீழ்ச்சியுறும் நாளே நமக்குப் பொங்கல் நாள் விழா நாளாக அமையும் - என விளக்குகிறது பாடல்.
137. மக்கள் எழுச்சிக்கான கரணியம் கண்டு அதை நீக்க முயலாமல் அவற்றை வன்முறை எனக்கூறும் அரசுக்கு, மறுப்பாக உணர்த்துவதாய் அமைந்தது இப்பாடல்.
138. அக்கால் எழுந்த பல்வேறு தமிழ் இளைஞர் அமைப்புகளையும் கண்டு அவற்றுக்கு அறிவூட்டலாய்-எங்ஙன் பாடாற்றுவது எனப் படிப்பிக்கும் பாடல்.
139. வலிவில்லாப் பகைவர்க்கு எதிராய் வகைசெய்து போரிட்டால் வருங்காலம் தமிழர்க்குத் தானே...
140. ஊக்கம் இழக்காமல் செயலாற்றிடவும், மக்களுக்கு ஓதி உணர்த்திடவும் வேண்டுமென்று உரைக்கின்றார் பாவலரேறு.
141.தமிழக மக்கள் விடுதலைக்காகப் பல்வகையில் இயங்கிச் செயற்பட்டுச் சிறை சென்ற இளைஞர்களும், அவர்களைத் தொடர்ந்து மக்களும் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறிப்பாய் உணர்த்தியது இப்பாடல்.
142. இழிவுணர்வும், கதையுணர்வும், பொழுதுபோக்குணர்வும் இனவுணர்வைச் சிதைக்கவே செய்யும் மொழியுணர்வு தோன்றிடாமல் பகை எவ்வாறு வெல்லப்படும் என்கிறார் பாவலரேறு.
143. 140ஆம் பாடலின் சூழலில் வெளிப்பட்ட பிறிதொரு பாடல். ஒன்றிணைந்து அழிம்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வெற்றிகாண அழைக்கிறார் பாவலரேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/28&oldid=1512996" இலிருந்து மீள்விக்கப்பட்டது