பக்கம்:கனிச்சாறு 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


உறும்பே கறங்குக! உறும்பே கறங்குக!
உறும்பே கறங்குக, நீ!
உறும்பே ரிடும்பினும் உணர்வுளோம் யாமென
உறும்பே கறங்குக, நீ!

-1952


2  நமக்கோர் ஏவல்!

திரவிடத்தின் மக்கட்குத் தீந்தமிழின்
ஆற்றல்தான் அவர்தம் மூச்சு!
திளைக்காத வெற்றிக்குச் சொல்லேதான்
அவர்கையுள் வாளின் வீச்சு!
கருவிடத்தின் குழந்தையினுக் குடலூற்றில்
விளைத்திடுக தமிழின் ஆவல்!
கனித்தமிழ்க்குத் தொண்டாற்றி மாய்ந்திடுவோம்
என்பதுவே நமக்கோ ரேவல்!

-1951
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/40&oldid=1523572" இலிருந்து மீள்விக்கப்பட்டது