பக்கம்:கனிச்சாறு 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  9



6 

அஞ்சாதீர்!

ஏடுப்பு


உள்ளங் கொதித் தெழுவீர் - உணர்வு
ஊற்றுப் பெருக்கினைப் போலப் பெருகியே (உள்ளங்)

தொடுப்பு



பள்ளிக் குழந்தைகள் உள்ளத்திலே - குலப்
பாகுபாட் டெண்ணத்தை ஊன்றிடவே
துள்ளிக் குதித்திடும் மண்டைகளை - நூறு
தூளாகச் செய்வதற் கெண்ணங்கொண்டே (உள்ளங்)

பிள்ளைகளைத் தமிழ்க் கிள்ளைகளை - கொடும்
பேய்மனங் கொண்டவர் முன்தொழிலைக்
கொள்ள விளைப்பது நல்லதுவோ - பூணூற்
கூட்டங்கள் செய்திடுந் தீமைகண்டே (உள்ளங்)

பயிர்த் தொழில் செய்பவர் பிள்ளைகளை - மேலே
படிக்க விடாமலே தடுத்ததன் பின்
உயிர்த் தொழில் மருத்துவர் பிள்ளைகளை - உயர்
வொன்றுமில் லாமற்செய் திட்டங்கண்டே (உள்ளங்)

'நீதி மனு'ப்படி சூத்திரர்தம் - மக்கள்
நீசத் தொழில்களைச் செய்திடவும்
வேதியர் செய்திடுந் தீங்கு கண்டு - மிக
வேதனை யோடொன்று கூடிநின்றே (உள்ளங்)

அச்சமுறுத்துவர் ஆட்கொல்லுவர் - பின்பு
ஆறேழு மாதஞ் சிறை கொடுப்பர்
நச்சுத் தனமான தீமை செய்து - தமிழ்
நாட்டாரை மாடுபோ லாக்குமுன்னே (உள்ளங்)

கள்ளவுள்ளத் தோடு காட்டரசை - எங்கும்
காணாத சட்டம் வீண் திட்டங்களை
தெள்ளத் தெளிவுடன் கண்டுவிட்டோம் னித்
தீரமுடன் செய லாற்றிடவே (உள்ளங்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/45&oldid=1523579" இலிருந்து மீள்விக்கப்பட்டது