பக்கம்:கனிச்சாறு 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


அஞ்சாதீர் அஞ்சாதீர் தோழர்களே - நம்மை
யாள நினைப்பவர் தாமொரு நாள்
பஞ்சாகித் தூளாகிப் போவதுண்டு - நம்மின்
பாதந் தொழுவது உண்டெனவே! (உள்ளங்)

-1953



7  ஆர்த்திங்கு வம்மினோ!

வம்மின் தமிழ்ப்புலவீர்!
மாணவரீர்! வல்லுணர்வீர்!
அம்மையீர்! ஆடவரீர்!
ஆர்த்திங்கு வம்மினோ!
செம்மைசேர் வாழ்வைத்,
துலங்கு மணிச்சுடரை,
நம்மை வளர்த்த
நறுஞ்செவிலித் தாய்மணியை,
மம்மர் அறுக்குமொரு
மாமருந்தைச், செந்தமிழ்த்தாய்
தம்மை, வளர்த்துத்
தழையவழி செய்வோமால்!
மும்முறையுஞ் சூளுரைத்தோம்;
மூச்சறுக்க நாந் துணிந்தோம்;
எம்மையருந் தொண்டிற்
கெருவென்றோம்” என்பீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/46&oldid=1523577" இலிருந்து மீள்விக்கப்பட்டது