பக்கம்:கனிச்சாறு 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  21

வெயிலும் மழையும் பாராமல்
வெற்பும் கடலும் பலகடந்து
வெளியார் விரும்பும் வாணிகமும்
விளைத்தாய் உன்றன் விறலெங்கே?
பயிலுங் கல்விப் பயன்முற்றும்
பண்பா டெல்லாந் துறந்தாய்நீ!
பழுகுந் தமிழும் மறந்தயலார்
பழிசேர் மொழிக்குந் துணைநின்றாய்!
துயிலும் வருமோ? இளந் தோன்றால்!
துள்ளி எழுக எழுகவே!
துலங்கும் உன்றன் பழஞ்சீர்மை
தோன்ற எழுக, எழுகவே! -5

பூக்கும் வளங்கள் முறுவலிக்கும்,
புனல்பாய் நாடு நின்னாடு!
பொழிலுங் காவுந் தடவயல்கள்
பொதியும் பயனும் நின்செல்வம்
தேக்கும் வெதிரும் வான் கமுகும்
தேய்வை, மகிழும், குலைவாழைத்,
தெங்கும், பனையும், அடர்ந்திருக்கும்
திசைதோய் மலைகள் நின்மலைகள்!
தூக்கும் அலைக்கும் போராடித்
துளைக்கும் நீர்க்குள் புகவாங்கே
துதையும் குவைசேர் சிப்பிக்குள்
தூங்கும் முத்தம் நின்முத்தம்!
காக்குந் திறமும் குன்றியிரு
கண்ணுந் திறவாய் எழுகவே!
கரியும் புலியும் நிகர்க்கின்ற
காளை எழுக, எழுகவே! -6

எத்திப் பறிக்கும் பெருங்கூட்டம்
எதிரில் இமையா விழித்திருக்கும்!
இமயப் பொருப்பில் கொடிநாட்டி
இருந்தாய் இன்னுந் துயில்கின்றாய்!
குத்திக் கிழிப்பார் நினதுதிறம்!
கூறாய்ப் பிரிப்பார் உன்னினத்தை!
கூரை பிரித்தே உள்ளிறங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/57&oldid=1424654" இலிருந்து மீள்விக்கப்பட்டது