பக்கம்:கனிச்சாறு 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


84 
ஆனால், தமிழ் நெஞ்சங்களே!

வீரத் தமிழ் மறவர்களே! உங்களைப் பதறப்பதற

வாரிக் கொடுத்து விட்டோமே!


அண்டையிலே தமிழ்நாடு!
அதுதான் எம் தாய் வீடு!
பண்டையிலே பூத்த தமிழ்ப்
பாலந்தான் எம் பீடு!
கொண்டையிலே பூ கசங்கக்
கொடியிடையில் துணி கசங்கத்
தண்டையிலே ஒலிஅழுங்கத்,
தங்கை அக்கை தீதென்றால்,
வந்திடவா மாட்டார்கள்!
வாழவைத்த அண்ணன்மார்?
கொந்திடவா மாட்டார்கள்,
சிங்களவன் குலைஉயிரை?
தந்திடவா மாட்டார்கள்
தாலிகளின் தனிமதிப்பை"

இந்தப்படி எண்ணிரோ
எந்தமிழ்த் தாய்மாரே?
எங்களுடை தங்கையரே!
எங்களுடை அக்கையரே,
செங்கழுகு புறாக்குஞ்சின்
சிறகடித்து மேல்பறந்து
பொங்கு (அ)ரத்தம் பீறிடவும்
போகும் உயிர் வீறிடவும்
சிங்களவன் உம்மைச்
சிதைத்திடும் அப் போதினிலே!

“எட்டி முழக்க மிட்டால்
எட்டிலக்கம் பேர் வருவார்!
கொட்டி அழைத்திட்டால்
கோடிக்குக் குறையாது!
அட்டியில்லை, தமிழ்நாட்டின்
அண்ணன்மார் தம்பிகள்மார்!
கெட்டி வயிரங்கள்
கேட்பதற்கு வருவார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/121&oldid=1424613" இலிருந்து மீள்விக்கப்பட்டது