பக்கம்:கனிச்சாறு 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  93

 
சிங்களவர்க் கெங்களுடை
செய்தி தெரியாது!
பொங்குணர்வுத் தமிழர் குலம்!
பூரித்த வீரர் குலம்!
திங்களொடும் பரிதியொடும்
தீரப் பிறந்தவர்கள்!
மங்காத வீரம்,
மலையுடைக்கும் வீறுநடை!

பக்கத்தில் வாழ்கின்றார்!
பதினெட்டுக் கற்கள்தாம்!
முக்கி எழுந்தால்
முழங்கால் கடல்நீர்தான்!
எக்கிக் குரல் கொடுத்தால்
இடுப்பொடிக்க வந்திடுவார்!
சிக்கி விட்டால் சிங்களவன்
சிறுகுடலும் மிஞ்சாது!

கொன்று குவித்திடுவார்,
சிங்களவக் காடையரை!
தொன்றுதொட்ட வீரம்
தொலைந்தழிந்தா போயிருக்கும்?
என்றேனும் ஓர்நாள்
ஈழம் கிடைக்காதா?"
என்றெண்ணி இருந்தீரோ?
நம்பிக்கை இழந்தீரோ?

சோழன்மார் பாண்டியன்மார்
சேரன்மார் முந்தையர்கள்
ஈழத் திருநாட்டின்
எம்மின் உடன்பிறந்தோர்
போழ உடல் பிளக்க,
புகைக்குழலின் இடிவெடிக்கு
வீழ, உயிர் கழல,
வீறிடும் அப் போதினிலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/122&oldid=1424614" இலிருந்து மீள்விக்கப்பட்டது