பக்கம்:கனிச்சாறு 3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


97 
ஓ! பிரபாகரனே! கதிர்க் கையனே
நீ எங்கே இருக்கிறாய்?


ஓ! பிரபாகரனே! கதிர்க் கையனே!
தமிழீழத்தின் அடிமையிருள்
போக்க வந்த வீரத்திருச்சுடரே!
தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே!
இந்திய நாய்களின் வேட்டை மானே!
நீஎங்கே இருக்கிறாய்?

உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாய்
உன்ஆர்த்த அரியணை மேனிக்குக்
குறிவைத் திருப்பதாய்ச்
சொல்லிச் சொல்லி
எள்ளி நகையாடுகிறார்களே,
இராசீவின் வஞ்சக வேடர்கள்!
தஞ்சம் கோராத தமிழனே!
அஞ்சாமையின் தொகுப்பே!
நீ,எங்கே இருக்கிறாய்?

கனிவுக்குக் கைகொடுத்து,
கல்போன்ற நின்தோளை நீவி, - உன்
கழுத்துக்குக் கத்திவைக்கும் எத்தர்கள்,
உன்னைச் சுட்டுப் பொசுக்கக்
குறிவைத்துத் திரிகிறார்களாமே!
மறம் மாண்ட தோற்றமே!
அறம் மாண்ட தமிழினத்தின் ஆற்றல் மறவனே!
விழுப்புண் வேங்கையே!
நீ எங்கே யிருக்கிறாய், சொல்!

பேராண்மையனே! வீரப் பெரியோனே!
ஊறஞ்சா வெல்படைத் தலைவனே!
இந்திய எலிப் பகையை
உயிர்த்தழிக்கும் நாகமே!
உன் உயிர்க்கு விலைபேசிய போதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/137&oldid=1424644" இலிருந்து மீள்விக்கப்பட்டது