பக்கம்:கனிச்சாறு 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  111

நாற்பத்தைந்து இலக்கம்
தமிழர்க்காக, உன் தோள்கள்
புடைத்து வீறு கொண்டெழுந்தன!
உன்னைச் சுற்றி ஓர் இலக்கம்
எதிரிப் படைப் போர் மறவர்!

நாலு பக்கம் வேடர் சுற்றிட
நடுவில் சிக்கிய மான்போல்,
நீ வேட்டையாடப் படுகிறாய்!
கழகத் தமிழினத்தின்
கவின் தொகுப்பே!
நீ எங்கே இருக்கிறாய்?

இலங்கையில் இராவணன் இருந்தாலன்றோ
உனக்குத் துணைவருவான்!
நீ இருப்பதோ, பகைவரின் வீடு!
நீ உழல்வதோ வல்லிருள் காடு!
உனக்குத் துணை உன் பீடு!
உருப்படுமா இந்த நாடு?
பகைவர் கைகளில்
அகப்படாத அருந்தமிழ்ப் பேறே!
அன்னைத் தமிழீழத்தின்
ஒரு தனி மகனே!

ஒப்பற்ற தமிழின வீறே!
முன்னை, கடந்த
ஈராயிரம் ஆண்டு
முதுமை அடிமை விலங்கை
முறித்தகற்ற வந்த சீரே!
முடிந்ததடா உன்னோடு
தமிழினத்தின் விடுதலைப் போரே!
அகன்ற வானின்
அல்லல் நிலாவே!
புகன்று விடு! நீ எங்கே
புறப்பட்டுப் போனாய்?
எங்கே இருக்கிறாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/140&oldid=1424632" இலிருந்து மீள்விக்கப்பட்டது