பக்கம்:கனிச்சாறு 3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  113

ஆரியக் கௌடிலி - இந்திரா என்னும்
பூரியை பிதுக்கிய முண்டையின் மகனே!

சிங்களக் கொலைஞன் செயவர்த் தனன் எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித் திடவே
முந்து' இரா சீவ், எனும் முண்டையின் மகனே!

உலகப் பந்தின் உயிர்ச்செறி எம்மினம்
விலகாக் குறியினன் ஆகி, விதிர்ப்புற
யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!

நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் வுலகத்து இருக்குநாள் தோறும்
எந்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதலால்
வெந்தழி யும்நாள் விரைந்துனக் கெய்துக!

இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!

எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உளக்குலை நொய்ந்தே
இட்ட சாவங்கள் இணைந்து கூடி
முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!

தமிழினம் தகைக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!
தணலும்எம் நெஞ்சின் தவிப்பை
மணல், நீர், தீ, வளி, வானம், - ஆற் றுகவே!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/142&oldid=1424635" இலிருந்து மீள்விக்கப்பட்டது