பக்கம்:கனிச்சாறு 3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க௬

கனிச்சாறு மூன்றாம் தொகுதி

13. 1965- இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக ஆசிரியர் சிறைப் படுத்தப்பட்டிருந்தபோது கடலூர்க் கிளைச் சிறையினின்று எழுதி விடுத்த பாடல்.
14.அரசியலை நடத்துகின்ற அமைச்சர்களின் கொடுமைகள் கண்டு கொப்பளித்தது.
15. தமிழ்நாட்டின் கயமை நிலைகளை அடுக்கிக் கூறியதாகும் இது.
16. ஒரு சூளுரை.
17. இடியாய் ஒரு வேண்டுகை.
18. இளைஞர்களுக்கு ஓர் உணர்வூற்றம்.
19.மக்களிடை ஒருபுறத்தில் எவ்வளவு நல்விளைவுகள் ஏற்பட்டாலும், கீழ்மையுணர்வுகளை வளர்க்கின்ற திரைப்படங்களாலும் செய்தித்தாள்களாலும் மக்கள் நலம் பெறுதல் அருமை எனுங் கருத்தை வலியுறுத்துவதாகும் இப் பாடல்.
20. ஒருமைப்பாடு என்றும், உறவு என்றும் வடவனோடு உறவாடும் தமிழக அமைச்சர்களைக் கண்டித்ததோடு, விடுதலையே வேண்டும் என்பதைச் சொல்லச் சொல்லும் பாடல்.
21. தமிழக ஆட்சியாளர் ஒவ்வொரு நலத்திற்காகவும் வடவரிடம் போய் நயந்து இரக்க வேண்டியதில்லை; தமிழகப் பிரிவினையே பல நலன்களுக்கும் வழிவகுக்கும் என வலியுறுத்த எழுந்தது.
22. தமிழ் நாட்டில் ஒரு பெரும் புரட்சி விரைவில் கிளர்ந்தெழும் என்பதைச் சுட்டி எச்சரித்த பாடல்.
23. நாட்டுணர்வை மக்களிடத்தில் எழுப்புவதற்காக எழுதப்பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
24. விடுதலைக்கான களத்தில் நமக்குத்துணை நாமே என்னுங் கருத்துடையது.
25. தமிழ் நாட்டிலுள்ள சாதி சமயப் புரட்டுகள், அரசியல் தில்லுமல்லுகள் முதலியவற்றால் மக்கள் உணர்வு மழுங்கிக் கிடப்பதை நினைவூட்டி எழுந்த பாடல்.
26. ஆரியப் பார்ப்பனர்கள் விளைவிக்கும் குமுகாயக் கேடுகளை அவர்கள் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். அல்லாவிடில் இறுதியில் அவர்கள் அழிவுற வேண்டியிருக்கும் எனும் எச்சரிக்கையாக எழுந்தது இது.
27. அடிமைத் தமிழர்கள் தங்கள் இன இழிவைப் போக்கிக் கொண்டாலொழிய அடிமைத் தளைகளை உடைத்தெறிய இயலாது எனுங் கருத்தமைந்தது.
28. கேட்கப் பெறாமல் விடுதலை கிடைக்கப் பெறுவதில்லை எனுங் கருத்தை வலியுறுத்துவது.
29. கொள்கை விளக்கப் பாடல். ஆசிரியரின் மூன்று உயிர்க் கொள்கைகளுள் ஒன்றை வலியுறுத்துகிறது. தமிழ்மொழி வடமொழியினின்றும் மீளவேண்டும்; தமிழினம் வேற்றின அடிமைப் படுத்தத்தினின்றும் மீளவேண்டும்: தமிழ்நிலம் வடவரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/17&oldid=1426182" இலிருந்து மீள்விக்கப்பட்டது