பக்கம்:கனிச்சாறு 3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௧


66. தமிழினத்துள்ளே வேற்றினத்தார் வந்து வயிறு வளர்க்கும்போது தமிழினத்தவரும் வயிறு வளர்க்கும் நோக்கில் அடிமைகளாய், மடமனத்தராய், மானமிலராய் இருப்பதைக் கண்டு வருந்தி மண்ணுரிமை மீட்பதென்றோ என்கிறார் பாவலரேறு.

67. 1990இல் தஞ்சையில் நடைபெறவிருந்து. நடக்கவொட்டாமல் தடைசெய்யப்பட்ட தமிழர் தன்னுரிமை மாநாட்டில் உரையாற்றச் சென்று, தமிழக அரசால் தளை செய்து சிறைப்பட்டு, வெளிவந்த ஞான்று பாடியது.

68. தமிழ்த் தேசிய எழுச்சி எழுப்பியதோடு, திராவிடம் குறித்த குழப்ப அரசியலுக்கு விடையே இப்பாடல். இந்தியத் தேசியம் எவ்வாறு மாயையோ அவ்வாறு திராவிடத் தேசியமும் மாயைதான் என்று கேள்வியால் விளக்குகிறார் பாவலரேறு.

69. காவிரிநீர்ச் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்க அதைத் தரமறுக்கும் கன்னட வெறியனையும், அதற்குச் செவி சாய்த்திடாத் தில்லிக்காரனையும் கடுமையாகச் சாடி வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலை கேட்டதும். வெறி வடவரிடமிருந்து விடுதலை கேட்பதும் சரியே என்கிற விளக்கத்தில் பிடுங்கிய உரிமை மீட்பது தவறா? என வினவுகிறார் பாவலரேறு.

70. செயலலிதா ஆட்சியில் கொடுகு சட்டத்தின்கீழ் (தடா) ஆசிரியர் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டபோது எழுதப் பெற்ற பாடல் இது. கொடுஞ்சிறையுட் படுத்தினாலும் தம் உயிர்க் கொள்கையான மொழி, இன, நாட்டுரிமைக் கொள்கை நோக்கத்தினை வெளிப்படுத்த அஞ்சிடாது உறுதியுடன எழுதியது இப்பாடல்.

தமிழீழம்

71. இலங்கைத் தமிழர்களின் கண்ணா வரலாறாய் இதில் சொல்லப் பெறுகிறது.

72. 1977-ஆம் ஆண்டு ஆகத்துத் திங்கால் இலங்கையில் சிங்கள இனம் தமிழினத்தை இனஅழிப்புச் செய்தபோது அச் சிங்கள இனத்துக்கு விடுத்த எச்சரிக்கை இது.

73. 1977 ஆகத்தில் இலங்கையில் நடந்த தமிழர் இன அழிவுப் போராட்டத்தில் தமிழர் அடைந்த துயரநிலைகளால் நெஞ்சு உருகிப் பாடிய பாடல் இது.

74. இப்பாடல் உலகத் தமிழினம் எழுச்சி கொண்டது குறித்துப் பொதுப்படக் கூறினும் ஆசிரியர் அவர்கள் இலங்கை சென்று திரும்பியதைத் தொடர்ந்து எழுதிய பாடலாதலால் இது தமிழீழ எழுச்சியையே குறிப்பாய்ச் சுட்டியது.

75. திருவாட்டி மங்கையர்க்கரசி 1979ஆம் ஆண்டில் தம் கணவர் திரு. அமிர்தலிங்கம் அவர்களுடன் தமிழகம் வந்து, தமிழீழத் தமிழர் பட்ட கொடுமைகளை யெல்லாம் இங்குள்ள தமிழ் மக்களிடம் எடுத்துரைத்தமையால் அவரை 3.4.1979இல் இலங்கைப் நாடாளுமன்றத்தில், கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூ மிகவும் இழிவுபடத் தாக்கிப் பேசியதைக் குறித்து எழுதியது. இந்தப்பாடல். ஈழத்தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதிகார ஏடான ‘சுதந்திரன்’ என்னும் இதழில் (29.4.1979இல்) வெளிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/22&oldid=1513054" இலிருந்து மீள்விக்கப்பட்டது