பக்கம்:கனிச்சாறு 3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨

கனிச்சாறு மூன்றாம் தொகுதி


76. இப்பாடலும் பொதுப்படத் தென்னவர் இனமே என்று தமிழினத்தையே சுட்டிச் சொல்லப் பெற்றிருப்பினும், தமிழீழ மக்கள் அல்லற்பாட்டை மனத்தில் இருத்தியே அக்காலச் சூழலில் எழுதப்பெற்றது. பாவலரேறு எழுத்தின் உறுதிப்பாட்டை விளக்கி அவ்வகையில் குமரிஇனம் செழித்துப் பெரும் புகழ்சேர வீறுகொள்ள வேண்டுமாய்க் கேட்கிறார்.

77. தமிழீழ விடுதலையை நோக்கிய இளைஞர்கள் ‘விடுதலைப்புலிகள்’ இயக்கமாய் முதலில் திரண்டபோது - அப் போராளிகளின் சிறப்பைக் குறித்து எழுதிய பாடல்

78. தமிழ்மொழி, இனம் காக்கத் தமிழ்ப்படை தமிழ் ஈழத்தில் எழுந்தது - அதைக் கண்டாகிலும் தமிழகம் எழுச்சியுறுமா என்று வினவுகிறது இப்பாடல்.

79. தமிழீழ விடுதலைச் சிந்தனைக்குத் தந்தை என்கிற வகையில் அழைக்கப்பெறும் மூதறிஞர் செல்வநாயகம் அவர்களின் 83ஆம் பிறந்தநாள் (31.3.81) தொடர்பாக எழுதப்பெற்ற பாடல் இது. தந்தை செல்வா அவர்களின் சிறப்பையும் - அவரின் தமிழீழ முயற்சிக்கான செய்திகளையும் எடுத்துரைக்கிறார் பாவலரேறு.

80. சிங்களப் பேரின அரசுக் காடையர் தமிழீழ மக்களைக் கொன்று குவித்திடும் கொடுமையைக் கண்டித்தும், அதற்கு எதிராய்-தமிழீழத்திற்கு ஆதரவாய் நாம் குரலெழுப்பிடாமல் பொறுத்திடலாமோ? - என்று தமிழகத்திலிருந்து முதன்முதலில் குரலெழுப்புகிறார் பாவலரேறு.

81. மாந்த உரிமைகளுக்காக எவர் குரலெழுப்பினும் அவர்க்குத் துணையாய் வாழ்த்தும் ஆர்வ நெஞ்சினர் பாவலரேறு அவர்கள் - தமிழீழ வேள்விக்கு உயிர்தர தயங்கா விடுதலைப் புலிகளை வாழ்த்தித் தமிழால் வணங்குவேன் என்று வீறுரைக்கிறார் பாவலரேறு.

82. தமிழீழத்திற்காகப் போராடிய இயக்கத்தினர் பலரும் விடுதலைப்புலிகள் என்றே அழைக்கப்பட்ட அன்றிருந்த சூழலில் குட்டிமணி, செகன் என்கிற தமிழீழ விடுதலை உணர்வு இளைஞர்கள் இருவர் சிங்கள அரசால் தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் அவர்களின் வீர உணர்வு, செயல் சிறப்பை விளக்கி அவர்களைத் தூக்கிலிடவேண்டாம் எனப் பாவலரேறு அவர்கள் கேட்டெழுதிய பாடல்.

83. தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஒவ்வொன்றையும் மற்றதற்கு எதிராக இந்திய உளவுத்துறையே திட்டமிட்டு மோதவிட்டது. அதோடு நில்லாது அவற்றுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்துவது போலவும், தமிழீழ உரிமைகளுக்காகப் பேச்சுரை நடத்துவது போலவும் ‘திம்பு’வில் கூடிப் பேச அழைப்பு விடுத்தது இந்திய அரசு. அத்தகு பேச்சுரையால் தமிழீழம் கிடைக்கப் போவதில்லை என விளக்கி எழுதிய பாடல்.

84. 1983ஆம் ஆண்டு சிங்கள வெறிப்படையால் கொடும் அடக்குமுறைக்குட்பட்ட தமிழீழ மக்கள் படுந்துயர் கண்டு தமிழக மக்கள் ஏதும் செய்யாமல் நின்று விட்டோமே என்று பதைபதைக்கும் உளத்தொடு பாடுகிறார் பாவலரேறு. பாடலின் முடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/23&oldid=1513055" இலிருந்து மீள்விக்கப்பட்டது