பக்கம்:கனிச்சாறு 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


உழைப்பவர் வாழ்க்கையில் துயர்காணல் நன்றோ?
உயர்வான திட்டங்கள் செயலாதல் என்றோ?
பிழைப்பெல்லாம் செல்வர்க்கே பேச்சென்ன பேச்சோ?
பிறநாட்டில் கையேந்தும் வாழவென்ன வாழ்வோ? (பெற்று)

இராப்பகல் உழைப்பவன் சாகின்றான் நாட்டில்;
ஏய்ப்பவன் துய்க்கின்றான் உயர்மாடி வீட்டில்!
வராப்பயன் வந்ததாய் முழங்குகின் றீர்கள்;
வாய்ச்சொல்லால் முழக்கத்தால்
என்னகண் டீர்கள்? (பெற்று)

-1970


30

என்றும் ஒரேநிலை ஏன்?


என்றும்போல் தேர்தல்வரும்; முடிவுவரும்;
ஆங்காங்கே, போட்டியிட்டே
ஆர்ப்பரிப்பார் பலருக்குள்ளும்,
என்றும்போல் ஒவ்வொருவர்
தேர்ந்தெடுக்கப் பெறுவார்கள்!
அமைச்சரவை அமைப்பார்கள்;
அமருவார்கள்!
என்றும் போல், தருக்கம் வரும்;
சட்டம்வரும்; திட்டம்வரும்;
செய்திவரும்; எல்லாமும்
வரும்! - ஆனாலும்,
என்றும்போல் ஏழையரின், உழைப்பவரின்,
நிலைமட்டும் இருந்தபடி யிருந்துவரும்!
எண்ணிப் பார்ப்பீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/55&oldid=1437678" இலிருந்து மீள்விக்கப்பட்டது