பக்கம்:கனிச்சாறு 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


விழுவாய் குழியுள் என்றே எண்ணினர்;
வீழ்த்தினர் சூழ்ச்சியுள் சிக்கினை, நீ! - அவர்
விரலை நீட்டிய திசையில் விரையுமுன்
வீழ்த்திய காலை நக்கினை,நீ!
கழுவாய் உனக்கே இதுதான் தமிழா,
கடமையைச் செய்ய நீவருவாய்! - உன்
கான்முளை வருவோர் தமக்கா கிலும், உயிர்
கழலினும் உரிமையை நீதருவாய்!
புழுவாய் விலங்காய் அடிமைப் பட்டது
போதும்; விடுதலை நாடிடுவாய்! - ஒரு
புல்லியன் எவனும் உனைநெருக் காமல்
பூட்கை மறத்தைப் பாடிடுவாய்!
எழுவாய் தமிழா! இன்றே! இன்னே!
இனமும் காப்பாய் மொழிகாப்பாய்! - நம்
இனத்தை நாமே காட்டிக் கொடுக்கும்
இழிவை மறப்பாய்! பழி மீட்பாய்!

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/69&oldid=1424559" இலிருந்து மீள்விக்கப்பட்டது