பக்கம்:கனிச்சாறு 3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  57

56  தமிழகத்தை வடநாட்டார் ஆள ஒப்பமாட்டோம்!

இந்தித்திணிப் பிலையெனினும்,
யாவருமே சமமெனினும், இந்தி யாவில்
சொந்தமொழி சொந்தஇனம்
சொந்தப்பண் பாடு,கலை தம்மைப் பேணி
முந்தைவர லாற்று நிலை
மொய்ம்பெல்லாம் வளர்க்கத்தடை இலையென் றாலும்,
செந்தமிழ்த்தாய்த் திருநாட்டைத்
தனிநாடாய்ப் பிரிப்பதைக்கை விடமாட் டோமே!

பார்ப்பனியம் இனநஞ்சைப்
பரப்புவதைக் கைவிடினும், வணிகக் கும்பல்
ஊர்ச்சுரண்டல் இல்லாமல்
உலகநலம் கருதிடினும் தமிழ கத்தைத்
தார்ப்பாய்ச்சுக் காரர்களாம்
வடநாட்டார் தாம்ஆள ஒப்ப மாட்டோம்!
ஆர்ப்பரிப்போம் செந்தமிழ்த்தாய்த்
திருநாட்டின் ஆட்சிதனி ஆட்சி என்றே!

உரிமையெனும் ஆட்சி நலம்,
உணவு(உ)டுக்கை உறையுள் நலம் யாவற் றுள்ளும்
பெரியநலம்; பெருமைநலம்;
பிறவியிலே உயர்ந்தநலம், என்றே எண்ணிச்
சரிநிகர்மை, பொதுமையுணர்
வென்பவற்றை நிலைநாட்டும் தமிழ்த்தாய் நாட்டுப்
பிரிவினையே வேண்டுமென்றும்
பிறவெல்லாம் வீனென்றும் பேசு வோமே!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/86&oldid=1424578" இலிருந்து மீள்விக்கப்பட்டது