பக்கம்:கனிச்சாறு 3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


70  தமிழ் நாட்டின் உரிமை மீட்போம்!

தமிழை மீட்க வேண்டும் - தமிழ்
இனத்தை மீட்க வேண்டும்!
கமழக் கமழத் தமிழன் நாட்டைக்
கடிதில் மீட்க வேண்டும்!

அமிழப் போவதில்லை - வேறு
ஆசை நமக்கிங் கில்லை!
இமையும் பொறுப்ப தில்லை - முன்
இழந்த உரிமை வேண்டும்!

வடவன் மொழியும் வேண்டா - அவன்
வழியும் நமக்கு வேண்டா!
வடவர் ஆட்சி வேண்டா - நாம்
வாழ உரிமை வேண்டும்!

பொறுத் திருந்து விட்டோம் - பூனை
போல் வாழ்ந்து விட்டோம்!
வெறுத்து விட்ட தாட்சி - தமிழ்
வீர வாழ்க்கை வேண்டும்!

கோழை யாகப் போனோம் ஊமைக்
குருட ராக வாழ்ந்தோம்!
ஏழ்மை தொலைய வில்லை - தமிழ்
நாட்டின் உரிமை மீட்போம்!

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/99&oldid=1424592" இலிருந்து மீள்விக்கப்பட்டது