பக்கம்:கனிச்சாறு 4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 69


உன்னோ டித்தனை ஆண்டிருந்த
ஒருத்தியை நீயும் நம்பாமல்,
என்ன வகையும் நீயறியா
திருந்தான் இவன்மேல் நம்பிக்கை
என்ன முறையால் கொண்டாய்,நீ”
என்றே கேட்டேன்; வாயடங்கி
என்னைப் பார்த்தான்; நடந்தேன்,நான்!
இருந்தவர் தாமும் கலைந்தனரே! 13

-1976


46

மதப்பற்று!


அன்பர்கள் இருவர் ஓர்நாள்
அதிகாலை, வயற்பு றத்தில்,
இன்பமாய்ப் பேசிக் கொண்டே,
எதிரெதிர் சிறிது தள்ளி,
வன்புதர் அருக மர்ந்தே
வன்கடன் கழிக்க லுற்றார்!
பின்பவர் பேச்சில் தெய்வப்
பேச்செழ லாயிற் றங்கே! 1

இருவரில் ஒருவர் ‘சைவர்’!
எதிர்ந்தவர் திருமால் அன்பர்!
திருமாலின் பத்தர் சொன்னார்;
‘திருப்பதி போக வேண்டும்;
பெருமாளுக் கிறுக்க வேண்டிக்
கொண்டதைச் செய்ய வேண்டும்;
ஒருமாதம் இரண்டு மூன்றாய்
ஓராண்டு சென்ற” தென்றே! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/104&oldid=1440733" இலிருந்து மீள்விக்கப்பட்டது