பக்கம்:கனிச்சாறு 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 75


51

அழகும் அருவருப்பும்!


அழகாய் உடுப்பதை
அளவில் குறைத்தால்
அருவருப் பாக
இருந்திடும்! அது
தெருவில் யார்க்கும்
விருந்திடும்!-பிறர்
பழகும் முறையில்
பண்பைத் தவிர்த்தால்
பழுதே வந்து
நிறைந்திடும்-உளப்
பான்மை மிகவும்
குறைந்திடும்!

தொடைகள் தெரிய
உடைகள் உடுப்பது
தொந்தரை களையே
விளைத்திடும்!-பெருந்
துன்பம் கூட
முளைத்திடும்!-உயர்
நடையும் ஒழுங்கும்
நம்மைக் காக்கும்;
நாட்டைக் காக்கும்;
நலந்தரும்!-மன
வாட்டம் போக்கும்;
வளந்தரும்!

-1977
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/110&oldid=1440740" இலிருந்து மீள்விக்கப்பட்டது