பக்கம்:கனிச்சாறு 4.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 கனிச்சாறு – நான்காம் தொகுதி


சிறக்கச் செய்திடு
சிறப்பூண் சிறிதுண்!
உறக்கம் மிகுதவிர்!
ஓய்வுளக் கிளர்ச்சி!
மறக்க மறப்பன!
மதிப்பன மதி; மகிழ்!
துறக்க, துறப்பன!
துய்ப்புயிர் வாழ்க்கை! 25

ஓம்புக நல்லுடல்;
உயிர்க்கது ஊர்தி!
சோம்பல் இறப்பு!
சுறுசுறுப் பியக்கம்!
தீம்பர் இணைதவிர்!
தேனினும் அளவுகொள்;
தேம்பல் கோழைமை;
திறலொடு துணிந்திடு! 26

நகைநட் பன்று;
நன்னட் பறிந்துதேர்!
பகைமுன் விலகு!
பார்வையிற் கூர்மைகொள்!
மிகைதவிர் எதிலும்!
மெப்புரை தப்பு!
புகைநெருப் பாகும்!
பொய்வளை விழையேல்! 27

பொழுதெழு முன்னெழு!
பொழுதொடு துயில்சேர்;
பழுதுறங் கின்மை!
பனிநீர் நிதங்குளி!
பொழுது பெறாதே!
தூய்மை உடையணி!
விழுதெனத் துணையிரு!
வீறுவிந் தடக்கம்! 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/121&oldid=1440751" இலிருந்து மீள்விக்கப்பட்டது