பக்கம்:கனிச்சாறு 4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 கனிச்சாறு – நான்காம் தொகுதி


57

வாழ்க்கைத் திரிபுகள்!


அறிவின் பெருக்கால்
அன்பு நசுங்கி
ஆணவம் கிளைத்தது தம்பி!-வெறும்
பொறிகள் பெருக்கம்
புன்மையை விளைத்துப்
போலியை வளர்த்தது தம்பி!
நெறிகள் திறம்பின;
நேர்மை இறந்தது!
நெளிவுகள் சேர்ந்தன பண்பில்-உயர்
குறிகள் மாறின;
கொடுமை நிறைந்தது;
குலைவுகள் நேர்ந்தன அன்பில்!

உண்மை மறைந்தது;
ஒழுக்கம் சிதைந்தது;
உரிமை இழிந்தது வாழ்வில்!-வெறும்
வெண்மை உயர்ந்தது;
வெறுக்கை மிகுந்தது;
விழுந்தனர் மக்கள் தாழ்வில்!
திண்மை விளைந்தது;
திறமை குலைந்தது;
தேமா பழுத்தது பிஞ்சில்!-உயர்
பெண்மை திரிந்தது;
ஆண்மை பிழைத்தது;
பேய்மை நிறைந்தது நெஞ்சில்!

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/123&oldid=1440753" இலிருந்து மீள்விக்கப்பட்டது