பக்கம்:கனிச்சாறு 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 89


58

உழைப்பே வாழ்க்கை!


உழைப்பே அறிவு!
உழைப்பே செல்வம்!
உழைப்பே நலன்கள் தேக்கும்!
உழைப்பே உறக்கம்!
உழைப்பே இன்பம்!
உழைப்பே வாழ்வைத் தூக்கும்!

உழைப்பால் உயர்க!
உழைப்பால் உண்க!
உழைக்கா துண்போன் சிறியோன்!
மழைக்கா லத்தும்
வெயிற்கா லத்தும்
மலையா துழைப்போன் பெரியோன்!

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/124&oldid=1440754" இலிருந்து மீள்விக்கப்பட்டது