பக்கம்:கனிச்சாறு 4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  125


82

சாலையின் ஓரத்திலே  !


சாலையின் ஓரத்திலே - ஓடுஞ்
சாக்கடை நாற்றம்என் மூக்கைத் துளைத்திட
காலைவி ரைந்துவைத்தேன் - இரு
கண்களி ழந்தவன் மண்ணிற் புரண்டனன்!
மாலைப் பொழுதெனவே - பெரும்
மக்கள் குழாம்இரு பக்கத்திலும், கடும்
வேலை முடிந்தவகை - என
வீடு திரும்பிய வாறிருந்தார்! - அந்தச்
சாலையின் ஓரத்திலே! 1

தொண்டை கிழியும்வகை - அந்த
நொள்ளையன், ‘கஞ்சியும் இல்லைஇல்லை’ என
மண்டை உடைத் தழுதான் - அவன்
மாளாத சொற்களைக் கேளாத வாறாக,
அண்டை நடப்போ ரெலாம் - உடல்
ஆட்டுவதும் பல்லைக் காட்டுவதும், எனக்
கண்டுங் காணாதவர் போல் - போய்க்
கொண்டிருந் தாரதைக் கண்டு நின்றேன்! - அந்தச்
சாலையின் ஓரத்திலே! 2

பட்டில் உடை உடுத்தி - இரு
பாவைய ரோடெழில் மேவிச் சிரிப்பதும்,
வட்டிக் கணக்கை எண்ணி - உள்ளம்
வாங்குவதும், உடல் வீங்குவதும், பணப்
பெட்டியின் திறவுக் கொத்தைத் தொட்டுப்
பார்ப்பதுவும், இன்பம் சேர்ப்பதுவும், குடை
தட்டி நடப்பது மாய்ப் - பலர்
சென்றிருந்தார் அதை நின்றுகண்டேன்! - அந்தச்
சாலையின் ஓரத்திலே! 3

ஓடும் இயங்கி செல்லும் - இன்ப
ஊர்தி செல்லும், பல பேர்அங்குச் சென்றனர்.
ஏடு படித்த வரும் - சில
எத்தர்களும் பணப் பித்தர்களும், இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/160&oldid=1444189" இலிருந்து மீள்விக்கப்பட்டது