பக்கம்:கனிச்சாறு 4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 கனிச்சாறு – நான்காம் தொகுதி


வேற்றுல காக்கினும் ஆக்கலாம்! - வான
வெளியினை வீழ்த்தினும் வீழ்த்தலாம் - உயிர்க்
காற்றுக் குறையினும் ஊதலாம்! - கடற்
கொள்புனல் வற்றினும் ஊற்றலாம்! - மலர்
தோற்றத்தைச் செய்யினும் செய்யலாம்! - அதில்
தேனினைக் கூட்டிடல் ஆகுமோ? - அறி(வு)
ஆற்றல்மிகப் பெரு மாட்சியே - அன்
பாற்ற லிலாவிடில் வீழ்ச்சியே! 5

-1957

 


84

மதங்காப்பார்!



மாடெனக் கொழுத்து, மரமெனக் குந்தி
மக்களும் மனைவியும் இன்றி - நல்ல
மாண்புயர் வொழுங்கதும் குன்றி - மயிர்க்
காடெனச் சடைகள் களிறெனத் தொந்தி
கனிபால் நெய்வகை யோடு நல்ல
காற்றமைந் துலவுமோர் வீடு - தனில்
வீடெனக் கூறி, விரிசடைக் கடவுள்
வியன்கதை நாள்தொறும் பேசி - நல்ல
வாழ்விலா மக்களை ஏசி - வெறுங்
கூடென உடலைக் கூறுவர் தமக்குக்
குருக்கள் எனும்பெயர் சூட்டி - பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/163&oldid=1444195" இலிருந்து மீள்விக்கப்பட்டது