பக்கம்:கனிச்சாறு 4.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152  கனிச்சாறு – நான்காம் தொகுதி


மனமும் ஒன்றுதான்; மக்களும் ஒருவரே!
இறைபல இருந்ததால் மதம்பல விருந்தன.
மதம்பல விருந்ததால் குலம்பல வெழுந்தன;
குலம்பல வெழுந்ததால் கொடுமைகள் நிறைந்தன; 65
உலகம் எல்லாம் ஒருகுலம் என்னும்
உயர்ந்த கொள்கைக்கு உரமிட்டு வளர்க்க!
அயர்வின்றி உழைக்க! ஆக்கம் உறுதி
உழைப்பிலார் சேர்த்த உடைமையை உலுக்குக!
உழைப்போர் இழந்த உடைமையை மீட்க! 70

வயிறு காயும் வறுமையைக் கொல்க!
உயிருவந் தூட்டும் உழவரைப் பேணுக!
பொதுமை உலகம் புதுக்கிடும்
புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே!

-1970


101

பொதுமை உலகம் !


ஒருதாய் நிலம்! ஒருதாய் மொழி!
உருவம், நிறம் ஒன்றே! - வாழ்
வுரிமை தனி அன்றே! - எனிற்
கருதாய் உடன் பிறந்தோர் பலர்
கண்ணீர் விடல் நன்றோ? - அவர்
கவலை யறல் என்றோ!

உருகாய் மனம்; உணராய் நிலை;
உழைப்போர் துயர் ஒருநாள் - கரை
உடைத்தே வெளி வருநாள் - புயல்
உருவாய் வரும்; பெறுவார் பலன்!
உண்மை இதை உணர்வாய்! - பொது
வுடைமை மனம் புணர்வாய்!

மனைகள் பல வெடுப்பார், தெரு
மண்ணில் புரள் வதுவோ? - உளம்
மறுகிக்குலை வதுவோ? - நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/187&oldid=1444469" இலிருந்து மீள்விக்கப்பட்டது