பக்கம்:கனிச்சாறு 4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  153


புனைதற்குடை தருவார், வெறும்
புழுவாய் உருள் வதுவோ? உடல்
புழுதி படி வதுவோ?

பனியும் மழை வெயிலும் குளிர்
பாரா துழைத் திடுவார் - பயிர்
பலவும் விளைத் திடுவார் - இங்
கினியும் பசித் துயரால், உயிர்
இழத்தல் தொடர் கதையோ? - சிலர்
இறுமாந் திடல் நிலையோ?

உலகம் பொது; உழைப்பும் பொது;
உரிமை பொது வைப்போம்! - அதன்
உடைமை நலந் துய்ப்போம் - மிகச்
சிலரால் பலர் நலியும் நிலை
சிதைப்போம்; துயர் புதைப்போம் - பொதுச்
சீர்மை நலம் விதைப்போம்!

-1970


102

ஆர்ப்பாட்ட உலகம் !


ஆர்ப்பாட்ட உலகமடா - தம்பி
ஆர்ப்பாட்ட உலகமடா; -இது
ஆர்ப்பாட்ட உலகமடா!

போர்ப் பாட்டும் புகழ்ப்பாட்டும்
பொய்ப்பாட்டு மே,நிறைந்த
ஊர்ப்பாட்டுக் கென்றென்றும்
உழைப்போருக் குதவாத (ஆர்ப்பாட்ட)

மண்ணென்றும் மனையென்றும்
மதிப்பான வாழ்வென்றும்
பெண்ணென்றும் மிகப்பேசிப்
பேயாட்டம் போடுகின்ற (ஆர்ப்பாட்ட)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/188&oldid=1444470" இலிருந்து மீள்விக்கப்பட்டது