பக்கம்:கனிச்சாறு 4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  161


அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாமெனும்
உரையிற் பராவிடும் உண்மைத் தமிழர் தம் 60
அறமும் உண்டுகொல்! அறமும் உண்டுகொல்!

தெய்வமும் உண்மை கொல்! தெய்வமும் உண்மை கொல்!
செய்தவத் தோர்தாம் செப்பிய மாத்திறன்-
மெய்யறி வோருளம் மொய்த்திடு பேரிறை-
கையற் றார்தமைக் காத்திடுங் கடிகா- 65
செய்வினைக் குறுதுணை
செயும்பே ராற்றல்-
இடர்ப்படு வார்தமை எற்றும்,ஏ மப்புணை-
சுடரொளி-அருட் கடல்-
சூழ்ந்த பரம் பொருள்-
பொய்ம் மையும் புன்மையும் போழ்க்குமென் றுரைத்த
தெய்வமும் உண்மைகொல்!
தெய்வமும் உண்மைகொல்! 70

-1971
 

108

ஊரைத் திருத்துமுன்... !


ஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன்
உன்னைத் திருத்தடா தமிழா-நீ
உன்னைத் திருத்தடா தமிழா!

பாரைத் திருத்திடல் நல்ல முயற்சியே!
பாட்டனும் பூட்டனும் செய்த பயிற்சியே!
யாரைத் திருத்தினர்; யாது வளர்ச்சியே?
யாங்கணும் யாங்கணும் வாழ்க்கை தளர்ச்சியே! (ஊரைத்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/196&oldid=1444484" இலிருந்து மீள்விக்கப்பட்டது