பக்கம்:கனிச்சாறு 4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  167


112

அன்றைய நாள் வருமோ ?


நட்ட நடுத்தெருவில்-தம்பி
நால்வர் நடக்கையிலே-நல்ல
வெட்ட வெளிச்சத்திலே-பெரும்
வீரர் எதிரினிலே-கடை
கெட்ட இழிசெயல்கள்-கொடுங்
கீழ்மை இருள்வினைகள்-பழி
சொட்ட நடக்குதடா-வெளிச்
சொல்ல முடிவதில்லை!-பார்,
நட்ட நடுத்தெருவில்! 1

பட்டப் பகலினிலே-இப்
பாழ்மை நடக்கையிலே-இங்கு
நட்ட நடுஇரவில்-தம்பி
நால்வரில் லாப்பொழுதில்-முன்
திட்டமிட் டேபலர்செய்-பெருந்
தீமையைக் கேட்பவர்யார்?-பலர்
கொட்டங்கள் என்னசொல்வேன்?-இழி
கூத்தைஎவ் வாறுரைப்பேன்?-அட
பட்டப் பகலினிலே! 2

பொட்டல் பெருங்காடே-முள்
போர்த்த புதர்நிலமே!-நிலை
கெட்ட தமிழ்நாடே!-வெறுங்
கீழ்மை மணல்மேடே!-உனைத்
திட்டி நெரிப்பதற்கும்-அறத்
தீய்த்துப் பொசுக்குதற்கும்-மனம்
எட்டிஎட் டிப்பாயும்-தமிழ்
ஏக்கந் தடுத்துவிடும்!-ஓ!
பொட்டல் பெருங்காடே! 3

செங்கட் புலிபாயும்மருள்
சேர்ந்த பெருங்காடும்-பெருங்
கங்குல் நிறைந்திருக்கும்-மலைக்
கற்புழை நீள்முழைஞ்சும்-வளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/202&oldid=1444497" இலிருந்து மீள்விக்கப்பட்டது