பக்கம்:கனிச்சாறு 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178  கனிச்சாறு – நான்காம் தொகுதி


120

உலகம்வாழ் தொழிலாளர்
ஒன்றுபடும் நன்னாள்!


எடுப்பு


உலகம்வாழ் தொழிலாளர்
ஒன்றுபடும் நன்னாள்!
இலகுபெரு மேநாள்!
எல்லார்க்கும் பொன்னாள்!  (உலகம்
வாழ்)


தொடுப்பு


விலகிற்று வல்லடிமை!
விளங்கியதே ஒருமை!
வெற்றிபெறத் தொடங்கியதே
உழைப்பாளர் உரிமை!  (உலகம்
வாழ்)


முடிப்பு


வெயர்வைக்கடல் பொங்கிற்று!
வெடித்ததடா புரட்சி!
வீழ்ந்ததடா மாய்ந்ததடா
முதலாளர் திரட்சி!
அயர்வென்ப தில்லையினி;
ஆர்த்தது,மு ழக்கம்!
அகன்றபெரும் உலகம்,இனி
உழைப்பாளர் பக்கம்!  (உலகம்
வாழ்)


பாடுபடும் கைகளெல்லாம்
இணைந்தன,காண் ஒன்றாய்!
பாட்டாளர் உழைப்பெல்லாம்
விளைந்தன,நெல் குன்றாய்!
மேடுபள்ளம் தூர்ந்ததினி!
வெளுத்ததடா சாயம்!
மேலோங்கி வளர்ந்தது காண்
பொதுமைக்குமு காயம்!  (உலகம்
வாழ்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/213&oldid=1444523" இலிருந்து மீள்விக்கப்பட்டது