பக்கம்:கனிச்சாறு 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உஉ

கனிச்சாறு நான்காம் தொகுதி


70. நம் மொழி, இனம், நாட்டின் தாழ்ந்த நிலை மீட்டு நற்றமிழ்க் கொற்றத்தை நாட்ட தன்னையே தர ஆயிரம் பேர் வேண்டுமென தம்பிக்குச் சொல்லி உணர்த்துகிறார் பாவலரேறு.

71. புறத்தே கவர்ச்சியிருப்பினும் அகத்தே நேர்மாறாய் இருக்கும் இடரும் உலகமிது! இதை எண்ணத் துலங்குவதும் ஏற்றம் விளங்குவதும் எளிதில்லை என்கிறார் பாவலரேறு.

72. கண்களாலும், செவியாலும், மூக்காலும் உணரும் இயற்கை இன்பங்கள் எத்தனை எத்தனை. அத்தனையையும் நுகரமாட்டாமல் பித்தனாய் ஒதுங்கி நிற்காதே.- என்று எடுத்துரைக்கின்றார் பாவலரேறு.

73. தொண்டு செய்ய வருபவர்க்கே துன்பங்கள் பெரிதும் சூழ்கின்றன. அவை இயற்கை அவர்க்கு வைக்கும் தேர்வு என்கிறார் ஆசிரியர்.

74. மடமையாய் ஊர்சுற்றுவதும், மண்டுத்தனமாய்ப் பெண்டிரைச் சுற்றுவதும், குரைப்புநாயாய்ப் பொறுப்பற்றிருப்பதும் மாணவத்தன்மையல்ல. கருத்தொடு கற்றுத் திருத்தமாய் நடப்பவரே மாணவராவார் என்று இடித்துரைக்கிறார் பாவலரேறு.

75. உழுவோரும் உழைப்போரும் ஒன்றிணைந்து பழுதடையும் தமிழகத்தைப் புதுப்பிக்கப் பாய்ந்தெழுவீர் இளமையோரே - எனத் தட்டியெழுப்புகிறார் பாவலரேறு.

76. ஆக்கவும், அளிக்கவும், அழிக்கவும் அருந்திறம் மூன்றினையுமே கொண்ட அன்னைக் குலத்திற்குத் தீங்கு செய்தலாகாது என்று பெண்டிர் பெருமையை விளக்குகிறது பாடல்.

77. பாட்டெழுதத் தெரிந்தால் போதாது - பாட்டின் பொருள் பழங்கதை பேசுவதாயன்றி, இனத்தை மீட்க வேட்டெழுப்பும் எழுத்தாக, விலங்கொடிக்கும் பாட்டாக ஓர் கோடி வேண்டும் என்றுரைக்கிறார் பாவலரேறு.

78. கல்வியின் நலன்களையும், சிறப்பையும் விரித்துரைக்கிறார் பாவலரேறு அவர்கள்.

79. இறப்பு என்பது உறுதி என்றிருக்கும் போது செருக்கும் தருக்குமே நம்மைச் சிதைக்கின்றன. நம் சிறப்பு வாழ்வே இறப்பை வென்றிடும் என்றுணர்ந்து செயல்படுவீர் இளந் தலைமுறையரே! - என்று எச்சரிக்கிறார் பாவலரேறு.

80. தனித்தனி உயிர் இயக்கங்களின் இணையைப் போற்றிக் கொள்வது போல், பொருந்தா நிலைகளைத் தூற்றாமல் வாழ்க்கைப் புதிரை விளங்கிக் கொள்ளச் சொல்லுகிற பாடல்.

பொதுமை

81. 1952-இல் அன்பர் ஒருவர் 'உலக நிலைகளை விளக்கிச் சுருக்கமாக ஒரு பாடல் தந்திடுக' என்று விடுத்த வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பெற்றவை இம் முப்பத்தொரு பாடல்களும்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/23&oldid=1444666" இலிருந்து மீள்விக்கப்பட்டது