பக்கம்:கனிச்சாறு 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௪

கனிச்சாறு நான்காம் தொகுதி


96. ஏழைக்குச் செல்வர்கள் உதவுவது இருக்கட்டும்; ஏழைக்கு ஏழை உதவுதல் உண்டா என்று கேட்பது இது.

97. பொதுமை மலர்ச்சிக்குப் புரட்சி தவிர வேறு வழியில்லை என்பது இப்பாடல்.

98. இழிதொழில்கள் இன்னும் இருக்கலாமா? நாட்டை மலர்த்திட நடையிடு தம்பி - என்கிறது இப்பாடல்

99. படிக்கின்றோம், பதவி பெறுகின்றோம். அந்தப் பதவியால் நாமே நலம் பெறுவதல்லால் ஊருக்கு உழைக்கின்றோமா? என்று கேட்கிறது இந்தப் பாட்டு.

100. கடந்த காலங்களில் சாதிகள் பெயராலும் சமயங்களின் பெயராலும் எத்துணை இழிவுகள் இங்கு வந்து புகுந்தன! அவற்றைப் போக்கிப் பொதுமை உலகத்தைப் புலரச் செய்ய வேண்டாவா இளைஞர்கள்? அவர்களுக்கு விடுத்த அழைப்பு இது.

101. உழைப்பவர்கள் உழைப்பின் பயனைப் பெறுகிறார்களா? இல்லையோ உழைப்பின் பயனைத் திருடுபவர்கள் உழைக்கின்றார்களா? அதுவுமில்லையே இவ்விரு தரத்தாரும் எப்பொழுது பொதுநிலைகளை உருவாக்குவார்களோ அதைப் பற்றிய முன்னுரை இப்பாடல்.

102. ஆரவார உலகத்தைப் பற்றிய படப்பிடிப்பு.

103. ஏழைகளும் மாந்தர்களே என்னும் பொதுமை உணர்வை ஊட்டியது.

104. ‘இரவலர்களுக்கு ஈவதால் இரவலர் பெருகுவர்’ என்ற உணர்வால் பலர் ஒரு காசும் ஈவதேயில்லை என்பதை மறுத்து எந்த அளவாகிலும் ஈயவேண்டும் என்ற உணர்வை எழுப்புவது..

105. பொதுத்தொண்டு செய்வார்க்குச் சில பொன்னுரைகள். கட்டாயம் கவனத்தில் வைக்க வேண்டியவை இவை.

106. ஒவ்வொருவரும் தம்தம் நலங்கள் பற்றியே பெருமளவில் எண்ணுகிறார்கள். பொதுமை உணர்வு பெற்றால் இவ்வுலகம் எல்லார்க்கும் எவ்வளவு இன்பமாகத் திகழும்? அது பற்றிய ஏக்கம் இது.

107. 1971-இல் கிழக்கு வங்கத்தில் பாகித்தான் முதலமைச்சர் யாகியாகான் செய்த கொடுமைகள் பற்றி மனம் நொந்து பாடியது.

108. பொதுத்தொண்டு செய்யப் புறப்படுவோர் முதலில் தம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்னுங் கருத்தை வலியுறுத்துவது,

109. அமெரிக்கர்களும், உருசியர்களும் வானியல் ஆய்வின் பொருட்டு ஏராளமான பொருட்செலவு செய்வதைக் கண்டு உலக உருண்டையில் வாழும் மக்கள் நலங் கருத வேண்டும் என்று கவன்று கூறியது ‘தேனமுதம்’ ஆண்டுமலரில் வந்தது.

110. “அரசுகள் மாறிப் பயன் என்ன? இருந்தபடியே இருக்கும் ஏழ்மை நிலை தொலைவது எப்போது?” என்று கேட்பது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/25&oldid=1444670" இலிருந்து மீள்விக்கப்பட்டது