பக்கம்:கனிச்சாறு 4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218  கனிச்சாறு – நான்காம் தொகுதி


158

தமிழின ஒன்றிணைப்புப் பாடல்.


ஒன்றிணைக! ஒன்றிணைக!
உலகத் தமிழினம் ஒன்றிணைக!

மன்றிருந்த தமிழ் மனத்தினால் ணைக!
மற்றதன் பண்பாடு கலைகளால் இணைக!
நின்றறம் பயில்திருக் குறளினால் இணைக!
நீண்ட நெடும்புகழ் மரபினால் இணைக! (ஒன்றிணைக!)

வென்ற தமிழ்மறம் விளங்கிட இணைக!
வீறுடன் திகழ்ந்த,அந் நினைவினால் இணைக!
சென்றுல கெங்கணும் பரவிவாழ்ந் திடினும்
செந்தமிழ் மறவாத நெஞ்சினால் இணைக! (ஒன்றிணைக!)

இன்றினி திணைக! ஏற்றமோ டிணைக!
எண்திசை நாட்டினும் இருப்பவர் இணைக!
நன்றென இணைக! நாடிவந் திணைக!
நாமினி ஒன்றெனும் நாட்டத்தோ டிணைக! (ஒன்றிணைக!)

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/253&oldid=1444636" இலிருந்து மீள்விக்கப்பட்டது