பக்கம்:கனிச்சாறு 4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 கனிச்சாறு – முதல் தொகுதி


166

தொண்டுக்கு இலக்கணம் !


அறிவின் பன் எனும்
‘விவேகா னந்தர்’
அருமை யாய்,ஒரு
கருத்தைச் சொல்கிறார்!
செறிவுற மக்கட்கோர்
கொள்கை கூறுவோர்
செவிகொள வேண்டிய
கருத்து, அது; சிந்திப்பீர்!

புதியதோர் கொள்கையை
மக்கட்குப் புகல்வரைப்
போலிகள் முன்வந்தே
ஏளனப் படுத்துவர்!
அதையும் மீறியே
அவர்கள் இயங்கினால்
அரம்பர்கள் இழிவுசெய்(து)
அவர்களை வருத்துவர்!

இழிவையும் கடந்து, அவர்
இயங்கினால், மறுபடி
இழிஞர்கள் அவர்களை
எதிர்த்திடத் தொடங்குவார்!
பழியெலாம் தாங்கிநற்
பாதையில் மேற்செலின்
பகைவரும் அவர்களை
ஏற்றுப் பணிகுவார்!

ஆகவே மக்களுக்(கு)
ஆக்கம் கருதுவோர்
அடுத்தடுத் தேவரும்
எதிர்ப்புகள் அறிந்து, பின்
சாகவே நேரினும்
கொண்ட கொள்கையைச்
சலித்தோ வெறுத்தோ
கைவிடல் சால்பிலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/261&oldid=1444654" இலிருந்து மீள்விக்கப்பட்டது