பக்கம்:கனிச்சாறு 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௬


157. தனித்தனி இயங்கங்களாய் நின்று முடங்கிப் போனோம் - பழஞ்சிறப்பு நம் உழைப்பு - வீரம் அனைத்தும் பொய்யெனில் ஓரமாய் நில்லுங்கள் - நாளை உலகப் பேரியக்கம் உருவாதல் காண்பீர் என எடுத்துரைக்கிறார் பாவலரேறு.

158. உலகத் தமிழின முன்னேற்றக் கழகத் தொடக்க மாநாட்டின் இறுதியில் தென்மொழி அன்பர்கள் ஒருங்கிணைந்து பாடியபாடல். உ.த.மு.க. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றின் இறுதியிலும் இதனைப் பாடுவதை அன்பர்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டுமென்கிறார் பாவலரேறு.

159. உ.த.மு.க. தொடக்க மாநாட்டு மலராக வெளிவந்த ‘தென்மொழி’யில் வந்த பாடலிது. பாவலரேறு ஐயா அவர்கள் உ.த.மு.க. கொள்கையை அடியொற்றி இக் குமுகம் எவ்வாறெல்லாம் மாற வேண்டும் எனத் தாம் எண்ணினார்களோ அவ்வாறு மாறுவதே தமக்குத் திருநாள் என்றும், அதுவன்றிப் பிறயாவும் மனம் நோகும் வெறுநாள் என்றும் குறிப்பிடுகின்றார்.

160. உ.த.மு.க. வின் ஏழு கொள்கைகளும் மலர்க இத் தமிழ் ஞாலத்தே என்று அறிவிக்கிறார் - பாவலரேறு.

161. ஓரணி சேர்ந்து நமை அழித்தவை தூர்ப்போம் - என அனைவரையும் அழைக்கும் உ.த.மு.க.வின் கொடி ஏற்றுவோம் வினையாற்றுவோம் அடிமைநிலை மாற்றுவோம் என்கிறார் பாவலரேறு.

162. கிளை பல நூறாகி ஓங்கிப் பெருக வேண்டும் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் - என்றுரைக்கிறார் ஆசிரியர்.

163. உ.த.மு.க. உண்மைக் கழகம். இதில் உறுப்பினராய்ச் சேருங்கள் என்று அதன் கொள்கை நிலைகள் - நோக்கங்கள் எவையென்றும் விளக்குகிறார் பாவலரேறு. இப்பாடல் உத.மு.க.வின் இதழான ‘தமிழ் நிலம்’ - முதல் இதழில் (7.11.1982) வெளிவந்தது.

164. ஏழு கொள்கைகளும் இவை எனக் கொண்ட உ.த.மு.க. நிலைக்க வேண்டுமாய் அறிவிக்கிறார் பாவலரேறு.

165. பொதுத்தொண்டு செய்ய வருவார் எத்தகைய நிலையினராய் இருத்தல் வேண்டும் என்று விளக்குகிறார் பாவலரேறு.

166. அறிவின்பன் - எனும் ‘விவேகானந்தர்’ குறிப்பிட்ட செய்தியைச் சுட்டுகிறது ‘தமிழ்ச்சிட்டில்’ வெளியான இப்பாடல் தொண்டு செய்ய வருவோர் பிற பொதுவினரால் தொடக்கத்தில் ஏளனப்படுத்தப் பெறுவர், பின்னர் இழிவுபடுத்தப்பெறுவர், அதன் பின்னர் எதிர்க்கப்பெறுவர் இறுதியில் ஏற்றுக் கொள்ளப்பெறுவர் - என்கிற வகையினை விளக்குகிறார் பாவலரேறு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/30&oldid=1444679" இலிருந்து மீள்விக்கப்பட்டது