பக்கம்:கனிச்சாறு 4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 கனிச்சாறு – நான்காம் தொகுதி


2

சுருட்டும் பீடியும் !

சுருட்டும் பீடியும் இளமையைச் சுருட்டும் அன்பு
சூடிய மனைவி நெருங்கையில் மருட்டும்
(சுருட்டும்)


இருட்டு வேளையில் இதழால் அவ் விதழில்
இனித்திட இனித்திடத் தேனுண்ணப் போகும்
குருட்டு மாந்தர்க்கு யானொன் ன்று சொல்வேன்
குடலோடு வாய்நாறும்! நற்காதல் சாகும்!
(சுருட்டும்)


திருட்டுத் தனமாகக் குடிகெட்டுப் போகும்
தென்னம் பிள்ளைக்குப் புகையாதா மீசை!
வறட்டு நெஞ்சோடு வாய்நாறும் கணவன்
வரும்போதே பெண்ணுக்குக் குறையாதா ஆசை!
(சுருட்டும்)


செந்தமிழ் பேசிடும் நாவும் மரக்கச்
செக்கச் சிவந்த செவ்விதழ் கருக,
தந்தம்போல் இருந்தபல் உறுதியும் தளரத்,
தளிர்மேனி சுருங்கிட உயிரை உலர்த்தும்
(சுருட்டும்)


பழத்தின் கதுப்பைப் போல்ஒளி செய்து
பருமை ஒட்டி உலராதா கன்னம்!
கிழத்தின் சாயல் வந்துன்னை அணைக்கக்
கிளிவாயைக் கோணிப் போகாதா அன்னம்!
(சுருட்டும்)


-1954
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/39&oldid=1440454" இலிருந்து மீள்விக்கப்பட்டது