பக்கம்:கனிச்சாறு 4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12  கனிச்சாறு - நான்காம் தொகுதி


9  தமிழர் படை !

பொங்குது பொங்குது நாடு!
பொங்கி வருந்தமிழ்க் கூட்டத்தின் முன்யாரும்
பிடுங்கி எறிந்திடும் பூடு!

தங்குது தங்குது நேர்மை!
தாங்கி வருந்தமிழ்க் கூட்டத்தின் முன்யாரும்
தணலில் எரிந்திட்ட நீர்மை!

சாடுது சாடுது கூட்டம்!
சாடும் மறத்தமிழ்க் கூட்டத்தின் முன்யாரும்
சடுதி யெடுப்பாரே ஓட்டம்!

ஓடுது ஓடுது தாழ்மை!
ஓடிய பின்தமிழ் நாட்டினில் எங்கணும்
ஒழியுதே ஒழியுதே ஏழ்மை!

வேகுது வேகுது நெஞ்சம்!
வேகும் பண்டைத்தமிழ்க் கூட்டத்தின் முன்யாரும்
வேண்டுவர் வேண்டுவர் தஞ்சம்!

ஏகுதே ஏகுதே பகை!
ஏகிய கொல்படைக் கூட்டத்தின் பின்னிங்கு
யாவர்க்கும் தோன்றுது நகை!

போகுது போகுது வீழ்வு!
போயின பின்னரிச் செந்தமிழ் நாட்டிடைப்
பூக்குது பூக்குது வாழ்வு!

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/47&oldid=1424808" இலிருந்து மீள்விக்கப்பட்டது