பக்கம்:கனிச்சாறு 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 கனிச்சாறு – நான்காம் தொகுதி


எத்தனை அறிவியல் ஏற்றங் காணினும்,
எத்தனைக் கருவிகள் வாழ்க்கையைத் துலக்கினும்
ஒருவனை வீழ்த்தி, ஒருவன் உயர்வதால்
இருநிலம் உயர்ந்தது என்பது சரியா?
மக்களைத் தாழ்த்துதல் மனத்தை அழிப்பதே!
மனத்தை அழிப்பது மக்களை அழிப்பதே!
வலியவன் ஒருவனே வாழத் தக்கவன்;
மெலியவன் என்பவன் வீழத் தக்கவன்;
என்பதே உலகின் இயற்கை என்றால்,
கருவிகள் செய்வதே உலகக் கல்வியாம்! 40
அறிவியல் எதற்கு? ஆகும் பயனென்?
அன்பும், அருளும் அழிவுக் குழிகளா?
மென்மை யாவையும் அழிப்பதா வாழ்க்கை?
மலர்கள், பெண்கள், வானப் பறவைகள்,
கிளர்வுறும் பூச்சிகள், விலங்குகள் யாவுமே
அழிக்கத் தக்கன ஆகுமேல் உலகம்
வழிவழி யாக வாழ்ந்துகொண் டிருக்குமோ?
எனவே தம்பி; ஏற்றம் என்பது
புனைவும் பெருக்கமும் அன்று
மனமும் வாழ்க்கையும் மலரச் செய்வதே!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/81&oldid=1440699" இலிருந்து மீள்விக்கப்பட்டது