பக்கம்:கனிச்சாறு 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 கனிச்சாறு – நான்காம் தொகுதி


35

உண்மை கடைப்பிடி ! உழைப்பில் உறுதி கொள் !


உன்னைச் சுற்றிலும்
உன்னைக் கெடுத்திடும்
உலகச் சூழல்கள்
ஒரு கோடி!- அவற்றில்
ஊன்றிடும் நினைவினை
உடனுடன் பிடுங்கியே
ஒளிர வேண்டும், நீ
மெரு கோடி!

கண்ணைக் கெடுத்திடும்
காட்சிகள் ஆயிரம்!
காதைக் கெடுத்திடும்
உரைநூறு! - மனப்
புண்ணைக் குடைந்திடும்
புரைக ளாம்; அவை
போக்கைத் தடுத்து, நீ
கரை யேறு!

நாக்கைத் தடுத்துவை!
நரம்பை ஒடுக்கிவை!
நல்லவர் கையொடு
கைபிணை! - ஒரு
தீக்கைத் தொடர்புனைத்
தீயில் தள்ளலாம்!
தீமை செய் யாதிரு;
மெய் துணை!

உண்மை கடைப்பிடி!
உழைப்பில் உறுதிகொள்!
ஒரு நாள் வரும், உனைக்
கரை யேற்றும்! - மனத்
திண்மைக்(கு) அறந்துணை!
தேர்ந்து முடிவுகொள்!
திசையெலாம் பணிந்து;நின்
உரை யாற்றும்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/91&oldid=1440720" இலிருந்து மீள்விக்கப்பட்டது